கனடாவில் பெண் நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவர்: கொந்தளித்த பொதுமக்கள்

Report Print Arbin Arbin in கனடா
229Shares
229Shares
lankasrimarket.com

கனடாவின் ஒன்றாரியோவில் பாலியல் புகாரில் சிக்கிய மருத்துவர் ஒருவர் தொடர்ந்து பணியாற்ற மேல் முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர், அடிப்படையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஒரு தோல்வி தான் என தெரிவித்துள்ளார்.

கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்னர் Temerra Dixon என்பவர் கிறிஸ்டி ஸ்ட்ரீட் பகுதியில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு காது தொடர்பான சிகிச்சைக்கு சென்றுள்ளார்.

விரிவான விசாரணைக்கு பின்னர் மார்பு பகுதியில் பரிசோதிக்க வேண்டும் என மருத்துவர் Javad Peirovy தெரிவித்துள்ளார். இதில் குழப்பமடைந்தாலும், மருத்துவரின் பேச்சைக் கேட்டு நோயாளிகளை பரிசோதனை செய்யும் மேஜை மீது படுக்க வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் குறித்த பெண்ணின் மார்பு மீது பரிசோதனை என்ற பெயரில் மருத்துவர் Peirovy ஆபாசமாக நடந்து கொண்டுள்ளார்.

இதில் அதிர்ச்சியடைந்த Temerra உடனடியாக அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

கடந்த 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளில் மொத்தம் 4 பெண்களிடம் மருத்துவர் Peirovy பாலியல் ரீதியாக அத்துமீறியுள்ளார். அதில் ஒருவர் தான் Temerra Dixon.

இந்த சம்பவம் நடந்த சில மாதங்களுக்கு பின்னர் டொராண்டோ பொலிசார் பாலியல் புகார் வழக்கில் குறித்த மருத்துவரை கைது செய்துள்ளதாக செய்தி நாளேடு ஒன்றில் புகைப்படம் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து தமக்கு நேர்ந்த சம்பவத்தையும் Temerra தானே முன்வந்து நீதிமன்றத்தில் பதிவு செய்துள்ளார்.

இதனிடையே நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த மருத்துவரின் வழக்கு வெறும் சாதாரண வழக்காக விசாரிக்கப்பட்டு பெயரளவில் தண்டனையும் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் அவரது மருத்துவ உரிமமும் 6 மாதத்திற்கு முடக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே ஒன்றாரியோவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் மருத்துவர் Peirovy மீண்டும் மருத்துவராக பணியாற்றலாம் என்ற உத்தரவை பிறப்பித்துள்ளது பாதிக்கப்பட்ட பெண்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்