அமெரிக்காவில் கைதான கனடா பெண்: காப்பாற்றுமாறு கண்ணீருடன் கதறும் வீடியோ

Report Print Balamanuvelan in கனடா
428Shares
428Shares
lankasrimarket.com

அமெரிக்காவின் ஜார்ஜியாவில் காரில் பயணித்த ஒரு பெண் கனடா லைசன்சுடன் பயணித்ததற்காக கைது செய்யப்பட்டார்.

அவர் கண்ணீருடன் கதறியழும் வீடியோ ஒன்று வெளியானதால் அவரது நண்பர்கள் அவரை மீட்க உதவியதையடுத்து அவர் விடுவிக்கப்பட்டார்.

ஒண்டாரியோவைச் சேர்ந்த Emily Nield(27) ஜார்ஜியாவில் காரில் பயணித்துக் கொண்டிருந்தார்.

குறிக்கப்பட்ட வேகத்தைவிட அதிக வேகத்தில் பயணித்ததற்காக அவர் பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.

அவரிடம் லைசன்சைக் கேட்ட பொலிசாரிடம் Emily தனது கனடா லைசன்சைக் காட்டினார்.

கனடா லைசன்சை வைத்து அமெரிக்காவில் கார் ஓட்ட முடியாது என்று கூறிய பொலிசார் அவரைக் கைது செய்தனர்.

அவர் தனது மொபைல் போனில் புகைப்படம் எடுத்து வைத்திருந்த பாஸ்போர்ட்டைக் கட்டியும் அவரை விடாத அவர்கள் ஒரிஜினல் பாஸ்போர்ட்டைக் கேட்டனர். ஒரிஜினல் பாஸ்போர்ட் அவரது கைவசம் இல்லாததால் அவருக்கு கைவிலங்கு மாட்டி அவரது காரையும் பறிமுதல் செய்தனர்.

பயந்துபோன Emily பொலிசாருக்கு தெரியாமல் தனது மொபைல் போனில் தனது நிலையைக் கண்ணீருடன் விளக்கி அந்த வீடியோவை தனது நண்பர்களுக்கு அனுப்பினார்.

அந்த வீடியோவைப் பார்த்த அவரது நண்பர் ஒருவர் தனது தந்தையான வழக்கறிஞரின் உதவியுடன் அவரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டார். தான் கைது செய்யப்பட்டதைக் குறித்துக் கலங்கிய Emily தனது எதிர்காலம் குறித்து மிகவும் பயமடைந்தார்.

வேலைக்காக விண்ணப்பிக்கும்போது, விண்ணப்பப் படிவத்தில் நீங்கள் எப்போதாவது கைது செய்யப்பட்டிருக்கிறீர்களா என்னும் கேள்வி ஒன்று கேட்கப்பட்டிருக்கும். தான் தற்போது கைது செய்யப்பட்டதால் தனது வேலை வாய்ப்பு பாதிக்கப்படும் என்ற அச்சம் அவருக்கு ஏற்பட்டது.

சட்டப்பூர்வமாக நீண்ட நடைமுறைகளுக்குப் பின் விடுவிக்கப்பட்ட Emilyயின் மீதான வழக்குகள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்பட்டன.

அதுமட்டுமின்றி அவரது கைது ரெக்கார்டும் நீக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவருவதாகவும் அமெரிக்க சட்டத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜார்ஜியா போக்குவரத்து விதிகளின்படி அமெரிக்கரல்லாதவர்கள் தங்கள் நாட்டு லைசன்ஸ் வைத்திருந்தால் ஜார்ஜியாவில் கார் ஓட்டலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்