கனடாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

Report Print Raju Raju in கனடா
217Shares
217Shares
ibctamil.com

கனடாவில் நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ள நிலையில் இது சம்மந்தமாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

VAUGHAN நகரில் இச்சம்பவம் நேற்று அதிகாலை நடந்த நிலையில் 3.30 மணிக்கு மேல் பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

அங்கு துப்பாக்கி குண்டுகள் உடலை துளைத்த நிலையில் இருந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த இன்னொரு நபர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ள நிலையில் அவர் உயிருக்கு ஆபத்தில்லை என தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்திலிருந்து தப்பிக்க முயன்ற நபர் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டில் கைது செய்யப்பட்ட நபருக்கு தொடர்புள்ளதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்