கனடாவில் தவறாக பயன்படுத்தப்படும் கருத்து சுதந்திரம்: தடுக்க சொல்லும் இந்தியா

Report Print Trinity in கனடா
192Shares
192Shares
lankasrimarket.com

பயங்கரவாதிகளை பெருமைப்படுத்துகின்ற வகையில் கருத்து சுதந்திரம் கனடாவில் தவறாகப் பயன்பட்டு வருகிறது. இதனை தடுக்க வேண்டும் என்று கனடாவை இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று ஜெனீவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் சபையின் யுனிவர்சல் ஆபிசியன் ரிவியூ அமர்வின் போது இதற்கான அறிக்கை வெளியிடப்பட்டது.

பிரதம மந்திரி ஜஸ்டின் ட்ரூயோவின் அரசாங்கமானது தங்கள் கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி வன்முறை மற்றும் பயங்கரவாதத்தை தூண்டுபவர்களை தியாகிகள் என்று கூறி வருபவர்களை தடுக்க வேண்டும் என்று இந்தியா கூறியுள்ளது.

இதை நிரூபிக்கும் வகையில் 1985 ஆம் ஆண்டு ஏர் இந்தியா குண்டுவீச்சிற்கு பொறுப்பாளியாக திகழ்ந்த தல்விந்தர் சிங் பர்மாரை தியாகிகள் என புகழ்பெற்ற பயங்கரவாதிகள் குறிப்பிடுவது குறிப்பிடத்தக்கது. இதனை ஒட்டி கனடாவின் சில சீக்கிய கோயில்களில் பர்மாரின் சுவரொட்டிகள் காணப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

சமீபத்தில் Surrey, B.C. ஹர்தீப் சிங் நிஜார்க்கு எதிரான முதல் தகவல் அறிக்கையை இந்தியா தாக்கல் செய்தது.

இந்தியாவில் ஒரு பெரிய பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள சீக்கியரான நிஜார் இதற்கு முன் சீக்கிய பிரிவினைவாதத்திற்கு ஆதரவாக பேசியதாக ஒப்புக் கொண்டார்.

ஆனால் எந்தவொரு வன்முறை நடவடிக்கையிலும் ஈடுபட்டதில்லை என்று மறுக்கவும் செய்துள்ளார். இந்நிலையில் இவர் போன்றவர்களுக்கு கனடாவில் ஆதரவு நிலவி வருகிறது.

சீக்கிய பிரிவினைவாத குற்றவாளிகள் மீதான கனடாவின் இந்த தாராளத்தன்மை இந்திய அரசாங்க நடவடிக்கைகளை கேள்விகுறியாக மாற்றியுள்ளதாக இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்