கனடாவின் உயரிய விருதை பெற்றவர் பாலியல் வழக்கில் கைது

Report Print Balamanuvelan in கனடா
127Shares
127Shares
lankasrimarket.com

கனடாவின் உயரிய விருதாகிய Order of Canada என்னும் கௌரவத்தை பெற்ற கனடாவின் ஒண்டாரியோவைச் சேர்ந்த Peter Dalglish, குழந்தைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக எழுந்த புகாரின் பேரில் நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இரண்டு சிறுவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள Dalglishக்கு குற்றம் நிரூபிக்கப்பட்டால் 13 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை வழங்கப்படும்.

ஒண்டாரியோவில் பிறந்த Dalglish, Street Kids International என்னும் தொண்டு நிறுவனத்தைத் தொடங்க உதவியவர்.

ஆப்கானிஸ்தானில் UN Habitat, லைபீரியாவில் UN Mission for Ebola Emergency Response உட்பட பல மனிதநேய ஏஜென்சிகளுடன் பல ஆண்டுகள் பணிபுரிந்தவர்.

பெரும்பாலான நேரத்தை குழந்தைகள் மற்றும் தெருக்குழந்தைகளுக்காக செலவிட்டவர். 2015 ஆம் ஆண்டு நேபாளத்தில் 9000 பேரை பலிவாங்கிய பெரும் நில நடுக்கத்தின்போது வீடுகளை இழந்தவர்களுக்கு உதவியவர் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அவரது மனிதநேய பணிக்காக அவருக்கு 2016 ஆம் ஆண்டு கனடாவின் உயரிய விருதுகளில் ஒன்றாகிய Order of Canada என்னும் விருது வழங்கப்பட்டது.

ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகளை கல்வி, வேலை மற்றும் சுற்றுலா ஆசை காட்டி அழைத்து அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது பொலிசார் குற்றம் சாட்டியுள்ளனர்.

அவர் மீது குற்றம் சாட்டப்பட்ட பின் பல வாரங்களாக பொலிசார் Dalglishஐ பின் தொடர்ந்தனர்.

குழந்தைகளைப் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதற்கான போதுமான ஆதாரம் உள்ளதால் விசாரணையை இன்னும் விரிவாக்கம் செய்ய உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்