இளவரசர் ஹரிக்கு கனடிய பிரதமர் வழங்கிய திருமண பரிசு

Report Print Deepthi Deepthi in கனடா

பிரித்தானிய இளவரசர் ஹரி - மெர்க்கல் திருமணப் பரிசாக கனடிய பிரதமர் 50,000 ஆயிரம் டொலர் தொகையை கனடியன், விளையாட்டு தொண்டு நிறுவனத்துக்கு வழங்கியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பிரித்தானிய இளவரசர் ஹரி- மெர்க்கல் தம்பதியினருக்கு கனடிய அரசாங்கம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.

வாழ்க்கையில் புதிய அத்தியாயத்தை தொடங்கவிருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வதோடு மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் உங்களை கனடாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள வரவேற்கிறோம் என கூறியுள்ளார்.

மேலும், இவர்களின் திருமணத்திற்கு பரிசாக, விளையாட்டில் பின்தங்கிய பின்னணியில் இருக்கும் குழந்தைகளுக்காக செயல்பட்டு வரும் Jumpstart என்ற தொண்டு நிறுவனத்திற்கு, 50,000 ஆயிரம் டொலர் வழங்கியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers