திருமணத்துக்கு சில மணி நேரத்துக்கு முன்னர் உயிரிழந்த தாய்: மணப்பெண் எடுத்த அதிரடி முடிவு

Report Print Raju Raju in கனடா

கனடாவில் மகள் திருமணத்துக்கு சில மணி நேரத்துக்கு முன்னர் தாய் உயிரிழந்த நிலையில் தாயின் ஆசைப்படி மகள் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

வான்கூவரின் Tofino பகுதியில் நடைபெறவிருந்த தனது மகள் விக்டோரியா இமோன் திருமணத்தில் கலந்து கொள்ள அவர் தாய் அன் விட்டன்பெர்க் இரு தினங்களுக்கு முன்னர் வந்தார்.

திருமணம் நடைபெற சில மணி நேரங்களே இருந்த நிலையில் அன் அங்குள்ள கடற்கரைக்கு சென்ற நிலையில் அங்குள்ள தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த விடயம் மணப்பெண்ணான விக்டோரியாவுக்கு தெரியவந்த நிலையில் அவர் அதிர்ச்சியடைந்தார்.

ஆனாலும் தாய்க்கு இறுதி சடங்குகளை செய்த பின்னர் அடுத்த நாள் விக்டோரியா திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இது குறித்து விக்டோரியா கூறுகையில், எந்த சூழலிலும் நமது குடும்பம் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதே எனது விருப்பம் என என் தாய் அன் அடிக்கடி கூறுவார்.

இதன் காரணமாக கனத்த இதயத்துடன் தாய் இறந்த நிலையிலும் அவர் விருப்பம் போலவே திருமணம் செய்து கொண்டுள்ளேன்.

அவரின் ஆசிர்வாதம் எனக்கு எப்போதும் இருக்கும் என நம்புகிறேன் என உருக்கத்துடன் கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்