கனடாவில் இந்திய உணவகத்தில் குண்டு வெடிப்பு: இந்திய வெளியுறவு துறை அமைச்சர் வெளியிட்ட தகவல்

Report Print Raju Raju in கனடா
516Shares
516Shares
ibctamil.com

கனடாவில் இந்திய உணவகம் ஒன்றில் வெடிகுண்டு தாக்குதல் நிகழ்த்தப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு அங்குள்ள இந்திய தூதரகம் மூலம் உதவப்பட்டு வருவதாக சுஷ்மா ஸ்வராஜ் கூறியுள்ளார்.

ஒன்றாறியோ மாகாணத்தில் உள்ள பாம்பே பெல் என்னும் இந்திய உணவகத்தில் சக்திவாய்ந்த வெடிகுண்டு வெடித்ததில் 15 பேர் காயமடைந்தனர்.

வெடிகுண்டை இரண்டு மர்ம நபர்கள் வெடிக்க வைத்தது பொலிஸ் விசாரணையில் தெரியவந்த நிலையில் அவர்களை பிடிக்க சிசிடிவி காட்சிகள் வெளியிடப்பட்டுள்ளன.

இது குறித்து பேசிய இந்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ கனடாவில் உள்ள இந்திய தூதரகங்கள் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகின்றன.

டொரண்டோவில் உள்ள இந்திய துணை தூதரிடம் தொடர்ந்து தொடர்பில் உள்ளேன், இதற்கான அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்