நிதிதிரட்டும் விழாவில் நடனமாடிய மந்திரி: வைரலாகி பரவி வரும் காணொளி

Report Print Kavitha in கனடா
208Shares
208Shares
ibctamil.com

ஏழைக்களுக்காக நிதி திரட்டு விழாவின் போது கலந்து கொண்ட புதிய ஜனநாயக கட்சி தலைவர் ஜக்மீத் சிங்கின் நடன வீடியோ ஒன்று தற்போது சமூக வளைத்தளங்களில் வைராகி பரவி வருகின்றது.

கனடா நாட்டில் சேவா புட் பேங்க் என்ற அமைப்பின் மூலமாக ஏழை மக்களுக்கு தரமான உணவு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த அமைப்பினை சீக்கியர்கள் நடத்தி வருகின்றனர்.

இந்த அமைப்பின் சார்பாக நிதிதிரட்டும் விழா நடைபெற்றது.

இந்நிலையில் இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கனடாவின் இனோவேஷன், அறிவியல் மற்றும் பொருளாதரா மேம்பாட்டு துறை மந்திரி நவதீப் பையின்ஸ் மற்றும் புதிய ஜனநாயக கட்சி தலைவர் ஜக்மீத் சிங் கலந்து கொண்டனர்.

குறித்த விழாவின் போது இருவரும் நடனமாடினர்.

இந்நிலையில் இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

அதுமட்டுமின்றி பதிவு செய்யப்பட்ட இரண்டு நாட்களில் 11 ஆயிரம் பேர் கண்டு ரசித்துள்ளனர் என்றும் இதன் மூலம் 50 ஆயிரம் டாலர் நிதி திரட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்