கனடாவின் ஒன்ராறியோ பகுதியை உலுக்கிய துப்பாக்கிச் சூடு: 4 பேர் கவலைக்கிடம்

Report Print Arbin Arbin in கனடா
797Shares
797Shares
ibctamil.com

ஒன்ராறியோ பகுதியை அடுத்த பிக்கரிங் சிவிக் காம்ப்ள்க்ஸ் அருகாமையில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 4 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக தகவல் தெரிவித்துள்ள டர்ஹாம் பகுதி பொலிசார், பிக்கரிங் சிவிக் காம்ப்ளக்ஸ் பகுதியின் அருகாமையில் இந்த துப்பாக்கிச் சூடு நடைபெற்றதாக கூறியுள்ளனர்.

சனிக்கிழமை இரவு சுமார் 11 மணி அளவில் அப்பகுதியில் பலர் துப்பாக்கி சத்தம் கேட்டுள்ளதாகவும் பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார், குறித்த கட்டிடத்தின் முன்பாக 4 பேர் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து டொராண்டோ அவசர உதவி குழுக்களின் உதவியுடன் அவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து ஞாயிறு அன்று அதிகாலையில் அப்பகுதி மக்களிடம் பொலிசார் விசாரணை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.

குறித்த விவகாரம் தொடர்பில் தகவல் தெரிய வரும் பொதுமக்கள் உடனடியாக பொலிசாருக்கு தெரியப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்