ஹெப்படைட்டிஸ் இருப்பது தெரியாமலே வாழும் 250,000 கனடா நாட்டவர்கள்: அதிர்ச்சித் தகவல்

Report Print Balamanuvelan in கனடா
353Shares
353Shares
ibctamil.com

1945க்கும் 1975க்கும் இடையே பிறந்த கனடா நாட்டவர்களில் 250,000 பேருக்கு ஹெப்படைட்டிஸ் C நோய்த்தொற்று இருக்கலாம் என கருதப்படும் நிலையில் அவர்களில் 40 முதல் 70 சதவிகிதம்பேர் தங்கள் உடலில் அந்த மோசமான வைரஸ் இருப்பது தெரியாமலே வாழ்ந்து கொண்டிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

நீண்டகால நோய்த்தொற்று, கல்லீரல் இழை நார் வளர்ச்சி (cirrhosis of the liver) அல்லது கல்லீரல் புற்று நோய்க்கு வழி வகுக்கும்.

டொரண்டொ பல்கலைக்கழகத்தின் கல்லீரல் சிகிச்சை நிபுணர் Dr. Jordan Feld, மக்கள் அபாயக் காரணிகளின் அடிப்படையில் பரிசோதனைக்குட்படுத்தப்படாமல், வயதின் அடிப்படையில் பரிசோதிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறார்.

கனடா நாட்டில் 1945க்கும் 1975க்கும் இடையே பிறந்தவர்களில் மூன்றில் இரண்டு பங்கு அல்லது முக்கால் வாசிப்பேர் ஹெப்படைட்டிஸ் Cயுடனே பிறந்துள்ளதே இதற்குக் காரணம் என்கிறார் அவர்.

தங்கள் வயதின் அடிப்படையில் இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் ஆகிவற்றைப் பரிசோதிப்பதுபோல், இந்த குறிப்பிட்ட கால இடைவெளியில் பிறந்தவர்கள் தங்களுக்கு ஹெப்படைட்டிஸ் C உள்ளதா என பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என தாங்கள் பரிந்துரைப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

இப்படிச் செய்வதன்மூலம் ஹெப்படைட்டிஸ் Cயுடன் வாழும் பெரும்பான்மை மக்களை அடையாளம் காணலாம் என்கிறார் அவர்.

ஊசி மூலம் போதை மருந்துகளை நண்பர்களுடன் பகிர்ந்து கோள்பவர்கள், சுத்தமற்ற ஊசிகள் மூலம் பச்சை குத்திக் கொள்பவர்கள், பலருடன் பாதுகாப்பற்ற பாலுறவு கொள்பவர்கள் அல்லது 1992க்குமுன் இரத்த தானம் அல்லது உடல் உறுப்பு தானம் பெற்றவர்கள் ஆகியவர்கள் ஹெப்படைட்டிஸ் C நோய்த்தொற்று அபாயம் அதிகம் உடையவர்கள்.

ஒருவருக்கு ஹெப்படைட்டிஸ் C இருப்பதாகக் கண்டறியப்பட்டாலும் அவர்கள் கவலைப்பட வேண்டியதில்லை காரணம், தற்போது அதற்கான சிகிச்சை எளிமையாகி விட்டது.

முன்பெல்லாம் ஹெப்படைட்டிஸ் Cக்கான சிகிச்சை கடுமையானது, பக்க விளைவுகளும் ஏராளம்.

ஆனால் தற்போது ஒரு நாளைக்கு ஒன்று அல்லது சில மாத்திரைகள் வீதம் 8 முதல் 12 வாரங்களுக்கு எடுத்தால் போதுமானது. மாத்திரைகள் ஓரளவு விலை அதிகம்தான்

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்