கனடா கார் விபத்தில் திருப்பம்: காரை ஓட்டியவர் சுடப்பட்டதாகத் தகவல்

Report Print Balamanuvelan in கனடா

கனடாவின் Etobicoke பகுதியில் கார் ஒன்று குடியிருப்புப் பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது.

தகவலறிந்த பொலிசார், தீயணைப்புத் துறையினர் மற்றும் மருத்துவ உதவி குழுவினருடன் விரைந்து வந்து காரை சோதனையிட்டனர்.

காரில் இருந்த நபருக்கு வலிப்பு வந்த நிலையில் துடித்துக் கொண்டிருந்தது கண்டு அது கார் விபத்தினால் ஏற்பட்ட காயங்களால் ஏற்பட்டிருக்கலாம் என கருதின நிலையில், அவர் துப்பாக்கியால் சுடப்பட்டிருப்பதைக் கண்டனர்.

அவரை உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

அவரைக் குறித்த விவரங்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. துப்பாக்கியால் சுட்டவரை பொலிசார் தேடி வருகின்றனர்.

சம்பவ இடத்தில் பொலிசாரும் தடயவியல் நிபுணர்களும் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்