கனடாவில் மூன்று வயது மகனை கார் ஓட்ட செய்த தாய் கைது

Report Print Balamanuvelan in கனடா
131Shares
131Shares
ibctamil.com

தனது மூன்று வயது மகனை மடியில் அமர்த்தி ஸ்டியரிங் செய்ய அனுமதித்து அதை செல்போனில் வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட தாய் கைது செய்யப்பட்டார்.

ஒண்டாரியோவின் Beavertonஐச் சேர்ந்த 33 வயது பெண் ஒருவர் தனது மூன்று வயது மகனை மடியில் அமர்த்தி காரின் ஸ்டியரிங்கை இயக்க அனுமதித்துள்ளார்.

கடந்த மாதத்தில் ஒரு குறிப்பிட்ட நாளில் பல குற்றச்செயல் வீடியோக்கள் சமூக வலை தளங்களில் இடுகையிடப்பட்டுள்ளதாக Durham பகுதி பொலிசாருக்கு தகவல் வந்தது.

அந்த வீடியோக்களில் ஒரு கார் நெடுஞ்சாலையில் அதி வேகத்தில் செல்வதும், முக்கியமாக அதில் ஒரு பெண் ஒரு குழந்தையை மடியில் அமரச் செய்து அவனிடம் ஸ்டியரிங்கை கொடுத்திருந்ததும், அவர்கள் இருவருமே சீட் பெல்ட் அணியாததும் தெளிவாகத் தெரிந்தது.

அந்த பெண் தனது செல்போனில் இந்த சம்பவத்தை படம் பிடித்திருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து பொலிசார் Children’s Aid Societyக்கு தகவல் கொடுத்தனர். அந்த பெண் மீது அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல், சீட் பெல்ட் அணியாதது உட்பட ஒன்பது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்ட அவளை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு பொலிசார் உத்தரவிட்டுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்