கொடுத்த உணவை சாப்பிடாததற்கு குழந்தைக்கு இப்படி ஒரு தண்டனையா?

Report Print Balamanuvelan in கனடா

மகளுக்கு கொடுத்த brussels sprouts என்ற முட்டைகோஸ் போன்ற உணவை அவள் சாப்பிடாததால் அதை அவள் சாப்பிட்டு முடிக்கும்வரை 13 மணி நேரம் சாப்பாட்டு மேஜையிலேயே உட்கார வைத்த தந்தையின் செயல் ஏற்றுக் கொள்ள முடியாதது என கோபப்பட்ட நீதிபதி, அந்த தந்தைக்கு 4 மாதங்கள் சமுதாயப் பணியை தண்டனையாக அளித்ததோடு தொண்டு நிறுவனம் ஒன்றிற்கு 500 டொலர்கள் வழங்குமாறும் உத்தரவிட்டார்.

கனடாவின் Gatineau நகரைச் சேர்ந்த ஒரு மனிதர் தனது எட்டு வயது மகளுக்கு brussels sprouts என்ற முட்டைகோஸ் போன்ற உணவை சாப்பிடக் கொடுத்திருக்கிறார்.

அந்த சிறுமிக்கு அந்த உணவு பிடிக்கவில்லை, என்றாலும் அவள் அதை சாப்பிட்டே தீர வேண்டும் என கட்டாயப்படுத்தி, அவள் அதை சாப்பிட்டு முடிக்கும்வரை 13 மணி நேரம் அவளை சாப்பாட்டு மேஜையிலேயே உட்கார வைத்திருக்கிறார்.

சிறுமியின் பாதுகாப்பு கருதி அவளது பெயரோ அவளது தந்தையின் பெயரோ வெளியிடப்படவில்லை.

அந்த சிறுமி கழிப்பறைக்கும் போக அனுமதிக்கப்படாததால் தன் உடையிலேயே சிறுநீர் கழிக்க வேண்டியதாயிற்று, இருந்தும் அவளது தந்தை அவளை உடை மாற்றக்கூட அனுமதிக்கவில்லை.

இதனால் அவள் hypothermia என்ற பிரச்சினையால் பாதிக்கப்பட்டதோடு நடுங்கிக் கொண்டே இருந்திருக்கிறாள். கடைசியாக வேறு வழியின்றி பிடிக்காத உணவை சாப்பிட்டு முடித்தாள், அதனால் அவள் வாந்தி எடுக்க நேரிட்டது.

அதற்கு பிறகே அவளை குளிக்கவும் தூங்கப் போகவும் அனுமதித்த அவளது தந்தை அவள் மீதி வைத்திருந்த ஒரு brussels sproutஐ மறுநாள் தூங்கி எழுந்ததும் கொடுப்பதற்காக எடுத்து பத்திரமாக வைத்திருந்தார் என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

இது ஏற்றுக் கொள்ளத் தக்கதல்ல என்றும் துன்புறுத்தக் கூடியதாகவும் உள்ளது என்று கூறியுள்ள நீதிபதி இதுவரை இது போன்ற ஒரு விடயத்தைக் கண்டதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்