கனடாவுடனான கோதுமை வர்த்தகத்தை முறித்துக் கொண்ட தென் கொரியா: பின்னணி

Report Print Balamanuvelan in கனடா

கனடாவின் ஆல்பர்ட்டாவில் மரபணு மாற்றப் பயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து ஜப்பான் கனடாவுடனான கோதுமை வர்த்தகத்தை நிறுத்திக் கொண்டதைப் போலவே தென் கொரியாவும் கனடாவுடனான கோதுமை வர்த்தகத்தை முறித்துக் கொண்டுள்ளது.

கனடா உணவு ஆய்வு ஏஜன்சி ஆல்பர்ட்டாவில் மரபணு மாற்றப் பயிர்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அறிவித்ததைத் தொடர்ந்து, ஜப்பான் கனடாவிலிருந்து கோதுமை இறக்குமதி செய்வதை வெள்ளிக்கிழமையுடன் நிறுத்திக் கொண்டது.

திங்கட்கிழமை ஜப்பானைப் பின்பற்றி திங்கட்கிழமை தென் கொரியாவும் கனடாவுடனான கோதுமை மற்றும் கோதுமை மாவு வர்த்தகத்தை முறித்துக் கொண்டுள்ளது.

கனடாவிலிருந்து கோதுமை இறக்குமதி செய்யும் முக்கிய நாடான ஜப்பான் ஆண்டொன்றிற்கு 1.5 மில்லியன் டன் கோதுமையை இறக்குமதி செய்கிறது. தென் கொரியா ஆண்டுக்கு 235,000 டன் கோதுமையை இறக்குமதி செய்கிறது. மரபணு மாற்ற பயிர்களை வர்த்தக ரீதியாக பயிரிடுவதற்கு யாருக்கும் அனுமதியில்லை.

மரபணு மாற்ற பயிர்கள் உள்ளதா என்ற சோதனையில் மரபணு மாற்ற கோதுமை உணவுடன் சேரவில்லை என்றும், தனியாக சில தாவரங்கள் மட்டுமே காணப்பட்டதாகவும் அதனால்எந்த அபாயமும் இல்லை என்று கனடாவின் சுகாதாரத் துறை கூறியது.

இதற்கிடையில் இது குறித்து ஆய்வு மேற்கொள்வதற்காக ஜப்பான் விஞ்ஞானிகள் கனடாவுக்கு வர இருப்பதாக ஆல்பர்ட்டாவின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...