கனடா நாடாளுமன்றத்தில் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டிய உறுப்பினர்: பெருகும் வரவேற்பு

Report Print Balamanuvelan in கனடா

கேள்வி நேரத்தின்போது கஞ்சாவை சட்டப்பூர்வமாக்குவது குறித்து கனடாவின் சுகாதாரத்துறை அமைச்சரை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கேள்விக் கணைகளால் துளைத்தெடுக்க, அதே நேரத்தில் அவருக்கு அடுத்த வரிசையில் அமர்ந்திருந்த ஒருவரின் செய்கை அடுத்த நாள் செய்திகளில் தலைப்புச் செய்தியாகியது.

லிபரல் கட்சி MPயான Karina Gould, தனது மூன்று மாதக் குழந்தைக்கு தாய்ப்பாலூட்டிக் கொண்டிருந்தார்.

பொது இடங்களில் தாய்ப்பாலூட்டுவது இன்னும் தாய்மார்களுக்கு பிரச்சினையாகவே இருக்க, தனது வேலை ஸ்தலத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது மகனுக்கு தாய்ப்பாலூட்டியதற்கு பாராட்டுகள் குவிகின்றன.

பதவியிலிருக்கும்போது தாயான கனடாவின் முதல் ஃபெடரல் அமைச்சர் என்ற கௌரவத்தை பெற்றுள்ள Karina Gould கடந்த மாதமே தனது குழந்தையுடன் பணிக்கு திரும்பினார்.

தனது மகனை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உட்பட தனது சகாக்கள் அனைவருக்கும் அறிமுகம் செய்தும் வைத்தார்.

இந்நிலையில் தனது குழந்தைக்கு அவர் பாலூட்டிய வீடியோ வெளியானதும், கனடாவின் பிரபல பத்திரிகை ஒன்றின் நிருபர் ஒருவர், குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுவது சகஜமான ஒன்று என ஏற்றுக்கொள்ளப்படும் ஒரு நாட்டில் நான் வாழ்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்று ட்வீட் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் Karina Gould, தாய்ப்பாலூட்டுவதில் என்ன அவமானம், என் பிள்ளை பசியாற வேண்டும் அதே நேரத்தில் நானும் வேலை செய்ய வேண்டும் என்று ட்வீட் செய்ததோடு தனக்கு ஆதரவாக இருக்கும் தனது சகாக்களுக்கு நன்றியும் தெரிவித்திருந்தார்.

அவரது ட்வீட்டிற்கு ஆதரவாக பலரும் ட்வீட்களை வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers