கனடாவில் நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ள இலங்கையர்கள்!

Report Print Ajith Ajith in கனடா

அமெரிக்காவின் இரகசியங்களை வெளியிட்ட எட்வேட் ஸ்னோடனுக்கு தங்குமிடத்தை ஏற்படுத்திக் கொடுத்தமைக்காக நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ள இலங்கையர்களுக்கு அடைக்கலம் வழங்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கனடாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற போர் காரணமாக அஜித் டேபாகமே கன்காமலகே என்ற இலங்கையர், நாட்டில் இருந்து தப்பிச்சென்று மூன்றாம் நாடு ஒன்றுக்கு செல்வதற்காக ஹொங்கொங்கில் அடைக்கலம் பெற்றார்

இந்த சந்தர்ப்பத்தில் அமெரிக்காவின் இரகசியங்களை வெளியிட்டமைக்காக அமெரிக்காவிலிருந்து வெளியேறிய எட்வேட் ஸ்னோடனும் ஹொங்கொங்குக்கு சென்றுள்ளார்.

இதன்போது அவருக்கு குறித்த இலங்கையர் தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்துள்ளார்.

இதனை காரணமாக கொண்டு குறித்த இலங்கையரின் அகதி அந்தஸ்து கோரிக்கை நிராகரிக்கப்படலாம் என்று அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு விரைவில் இடம்பெறவுள்ளது.

இந்த நிலையில் அவர் வழக்கில் தோல்வியடைந்தாலும் அவருக்கு அடைக்கலம் வழங்கவேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் கனடாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers