ஜாகிங் செய்யும்போது கனடா எல்லையை தாண்டிய இளம்பெண்ணுக்கு சிறை

Report Print Balamanuvelan in கனடா

ஜாகிங் செய்யும்போது தவறுதலாக கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் உள்ள எல்லையைத் தாண்டி அமெரிக்க பகுதிக்குள் சென்ற பெண் கைது செய்யப்பட்டு இரண்டு வாரங்கள் காவலில் வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீப காலமாக அமெரிக்க எல்லைக்குள் சட்ட விரோதமாக நுழைபவர்கள் கைது செய்யப்பட்டு பெரியவர்கள் தனியாகவும் பிள்ளைகள் தனியாகவும் சிறை வைக்கப்படும் சம்பவங்கள் உலகெங்கும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில் தவறுதலாக அமெரிக்க எல்லைக்குள் கால் வைத்த பெண் ஒருவர் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த இளம்பெண் Cedella Roman (19). கனடாவிலிருக்கும் தனது தாயை சந்திப்பதற்காக சென்றிருந்த அவர், கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவிலுள்ள White Rock பகுதியிலிருந்து ஜாகிங் செய்தவாறே தவறுதலாக அமெரிக்காவின் வாஷிங்டனுக்குள் சென்று விட்டார்.

அங்கு அமெரிக்க எல்லை என்பதற்கான அடையாளமோ அறிவிப்புப் பலகைகளோ வைக்கப்பட்டிருக்கவில்லை.

Facebook

அழகான இயற்கையை தனது கெமராவிற்குள் சிறைப்பிடித்துவிட்டு அவர் வந்த வழியே திரும்பும்போது இரண்டு அமெரிக்க எல்லை ரோந்து பொலிசார் அவர் சட்ட விரோதமாக எல்லையை தாண்டியதை தாங்கள் கெமராவில் கண்டதாகக் கூறி அவரைக் கைது செய்தார்கள்.

சரியான ஆங்கிலம் பேச வராத Cedellaவின் கையில் அவளது ஐ.டி. உட்பட எதுவுமே இல்லை. கைது செய்யப்பட்டு காவல் மையம் ஒன்றிற்கு கொண்டு போகப்பட்டதும் தனது தாயை தொடர்பு கொண்டார் Cedella.

உடனடியாக Cedellaவின் தாயார் அவளது பாஸ்போர்ட் உட்பட அனைத்து அடையாள ஆவணங்களையும் கொண்டு வந்தார்.

ஆனால் அதிகாரிகள் அந்த ஆவணங்கள் கனடா நாட்டு அதிகாரிகளால் சரி பார்க்கப்பட வேண்டும் என்று கூறி அவளை விடுவிக்க மறுத்து விட்டனர், இரண்டு வாரங்கள் காவலில் வைக்கப்பட்டார் Cedella.

இதுகுறித்து அமெரிக்க சுங்கத்துறை மற்றும் எல்லை பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் கூறும்போது, அதிகாரப்பூர்வ நுழைவிடம் வழியாக அல்லாமல் வேறு வழியாக அமெரிக்க எல்லைக்குள் கால் வைக்கும் யாரானாலும் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்படுவார்கள், அவர்கள் தெரிந்து செய்தாலும் சரி, தெரியாமல் செய்தாலும் சரி விளக்கமளித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்