நிறை மாத கர்ப்பிணி மனைவியின் கை, விரல்களை வெட்டிய கொடூர கணவன்

Report Print Santhan in கனடா

அமெரிக்காவில் நிறைமாத கர்ப்பிணி மனைவியின் கை மற்றும் விரல்களை வெட்டி விட்டு கணவர் கனடாவிற்கு தப்பி ஓட முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசித்து வரும் Yong Lu(35) என்பவர் நயாகரா ஆற்றில் குதித்து கனடாவிற்கு தப்பி ஓடுவதற்கு முயன்ற போது பொலிசார் அவரை அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ஏனெனில் இவர் கர்ப்பிணியான அவரது மனைவியை கொலை செய்துவிட்டு தப்பி ஓட முயன்றதாக கூறி கைது செய்துள்ளனர்.

இது குறித்து உள்ளூர் ஊடகம் தெரிவிக்கையில், நியூயார்க் நகரில் அமைந்திருக்கும் அடுக்கு மாடி குடியிருப்பில் Yong Lu தன்னுடைய மனைவி Yang(31)-வுடன் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை உள்ளூர் நேரப்படி 12.30 மணி அளவிற்கு இவர் இருக்கும் குடியிருப்பில் அறையில் அலறல் சத்தம் கேட்டுள்ளது.

இதனால் பதற்றமடைந்த அருகில் இருக்கும் குடியிருப்பு வாசி ஒருவர் உடனடியாக இது குறித்து பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

பொலிசார் அப்பகுதிக்கு விரைவதற்குள், Yong Lu தப்பி ஓடியுள்ளார். சம்பவ இடத்தை பொலிசார் பார்த்த போது மனைவியின் வலது பக்க கை மற்றும் விரல்கள் வெட்டப்பட்ட நிலையில் கிடைந்துள்ளது.

பொலிசார் உடனடியாக அவரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால் Yang கோமா நிலைக்கு சென்றுவிட்டதாகவும், மருத்துவர்கள் அவருடை கையை மீண்டும் சேர்த்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மனைவியை கொலை செய்த அந்த நபர் உடனடியாக தன்னுடைய உடமைகளை எல்லாம் எடுத்து கொண்டு தப்பிக்க ஓடியுள்ளார்.

இதில் பேருந்தில் ஏறி தப்பிக்க முயன்ற போது, இவருடைய நடவடிக்கையை பார்த்து ஓட்டுனர் அனுமதிக்கவில்லை. சந்தேகத்தில் அந்த நபர் பொலிசாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

அதன் பின் பொலிசார் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்திய போது நயகரா ஆற்றில் குதித்து கனடா செல்வதற்கு திட்டம் திட்டியுள்ளது தெரியவந்துள்ளது.

இதற்காக அவர் லைப் ஜாக்கெட்டையும் பயன்படுத்துவதற்கு தயாராக இருந்துள்ளார் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து பொலிசார் அவரை நயகரா ஆற்றின் அருகில் கைது செய்துள்ளனர்.

மேலும் அவர் ஏன் மனைவியை இப்படி செய்தார் என்பது குறித்து பொலிசார் எந்த ஒரு தகவலும் தெரிவிக்கவில்லை. முழு விசாரணைக்கு பின்னரே அனைத்து தகவல் தெரியவரும் என்று கூறப்படுகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்