அமெரிக்காவுக்கு பல பில்லியன்கள் வரி விதித்த கனடா: தொடங்கிய பழி வாங்கும் நடவடிக்கை

Report Print Balamanuvelan in கனடா
261Shares
261Shares
lankasrimarket.com

கனடாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் துருப்பிடிக்காத எஃகு மற்றும் அலுமினியத்திற்கு இறக்குமதி வரி விதித்த அமெரிக்காவை பழி வாங்கும் விதமாக கனடாவும் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.

டிரம்ப் நிர்வாகம் எஃகு மற்றும் அலுமினியத்திற்கு இறக்குமதி வரி விதித்ததற்கு பழி வாங்கும் நடவடிக்கையாக பல பில்லியன் டொலர்கள் அமெரிக்காவிற்கு வரி விதித்துள்ளது.

ஜூலை 1 முதல் அமுலுக்கு வரும் சில பொருட்களின் மீதான வரியை 10 முதல் 25 சதவிகிதமாக ஆக்க பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் அரசு முடிவு செய்துள்ளது.

கெட்ச் அப், புல் வெட்டும் இயந்திரம் மற்றும் மோட்டார் படகுகள் மீதான வரி மட்டும் 12.6 பில்லியன் டொலர்களாக ஆக்கப்பட்டுள்ளது.

கனடாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் Chrystia Freeland, இது சரியான பழிக்கு பழி வாங்கும் நடவடிக்கை என்று தெரிவித்தார்.

இதில் விந்தையான விடயம் என்னவென்றால் வரி விதிப்புக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட பொருட்கள் பொருளாதார தாக்கத்தை விடவும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்பதாகும்.

உதாரணமாக கனடா, அமெரிக்காவிலிருந்து 3 மில்லியன் டொலர்கள் மதிப்புள்ள யோகர்ட்டை இறக்குமதி செய்கிறது.

பெரும்பாலான யோகர்ட் Wisconsin பகுதியிலிருந்து வருகிறது. Wisconsin, சபாநாயகர் Paul Ryanஇன் சொந்த ஊர். தற்போது யோகர்ட்டுக்கு 10 சதவிகித இறக்குமதி வரி விதிக்கப்பட்டுள்ளது.

அடுத்த பொருள் விஸ்கி, இது Tennessee மற்றும் Kentucky பகுதியிலிருந்து வருகிறது, Kentucky, Republican Senate தலைவர் Mitch McConnellஇன் சொந்த ஊர்.

இதுபோக, வர்த்தக யுத்தத்தை அமெரிக்க அதிபர் இன்னும் அதிகரித்தால் அதை எதிர்கொள்ளவும் தாங்கள் தயாராக இருப்பதாகவும் கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் Chrystia Freeland தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்