போலி கிரெடிட் கார்டு மூலம் ஏமாற்ற முயன்ற திருடர்களை மடக்கிய பொலிஸ்: சினிமாவை மிஞ்சும் காட்சிகள்

Report Print Trinity in கனடா
251Shares
251Shares
lankasrimarket.com

போலி கிரெடிட் கார்டு மூலம் பொருட்கள் வாங்க முயன்ற திருடர்களை பொலிசார் மடக்கி பிடித்த சம்பவத்தில் நடந்த சுவாரஸ்யமான வீடியோ காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.

கனடா எட்மன்டன் பகுதியில் உள்ள Spruce Grove எனும் கடையில் இருந்து காவல்துறையினருக்கு அழைப்பு வந்தது.

போலி கிரெடிட் கார்ட் பயன்படுத்தி ஒரு ஆணும் பெண்ணும் தங்கள் கடையில் பொருள் வாங்க வந்ததாக சொன்ன புகாரை ஏற்று பொலிஸார் அங்கு விரைந்தனர்.

அப்போது எதிர்பாராத விதமாக அந்த பெண் காவலரை கீழே தள்ளி அழுத்து பிடித்து கொள்ள, அந்த ஆண் தப்பித்து கொள்ள கடையில் அங்குமிங்கும் ஓடி வெளியேற பார்க்கிறான்.

முடியாததால் மீண்டும் வாசலுக்கே வர அங்கு தயாராக இருந்த அதிகாரியிடம் மாட்டுகிறான். இவனை மடக்கி தரையில் படுக்க வைத்து விலங்கு போடுவதற்குள் அந்த பெண் கடையில் ஒளிந்து கொள்ள இடம் பார்க்கிறாள்

மேலே ஒரு பரண் தெரிய அதில் ஏறி ஒளிந்து கொள்கிறாள், இத்தனையையும் சிசிடிவி கமெரா வீடியோ எடுத்து கொண்டே இருக்கிறது.

பரண் மேல் ஏறிய பெண்ணின் கனம் தாங்காமல் அந்த பகுதி உடைந்து விழ மீண்டும் கடையின் மத்திய பகுதிக்கே வந்து விழுகிறாள் அந்த பெண், அதன்பின் மீண்டும் ஓட முயற்சித்து மறுபடி காவலரிடம் மாட்டி சரணைடைகிறாள்.

கடந்த வாரம் நடந்த இந்த நிகழ்வை தற்போது கோர்த்து வீடியோவாக செய்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்திருக்கிறார் சம்மந்தப்பட்ட கடை உரிமையாளர்கள்.

சினிமாவை விட நகைச்சுவையாக முடிந்த இந்த துரத்தல் வீடியோ அனைவராலும் விரும்பி பார்க்கப்படுகிறது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்