பெண் நிருபரிடம் தவறாக நடந்து கொண்டாரா கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ?

Report Print Balamanuvelan in கனடா
286Shares
286Shares
lankasrimarket.com

பெண் நிருபர் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து அவ்வாறு தவறாக நடந்து கொண்டாரா என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

18 ஆண்டுகளுக்கு முன் இசை நிகழ்ச்சி ஒன்றின்போது பெண் நிருபர் ஒருவரிடம் தவறாக நடந்து கொண்டதாக கனடா பிரதமர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கனடா தின விழாவில் பங்கேற்ற கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடம் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது “Crestonஇல் அன்றைய தினம் நடந்த விடயங்கள் எனக்கும் நன்றாக நினைவில் இருக்கின்றன.அன்றைய தினம் இனிமையாக கழிந்தது, அந்த நாளில் கெட்ட விடயங்கள் எதுவும் நடந்ததாக எனக்கு நினைவில்லை” என்றார் அவர். 2000ஆம் ஆண்டு Crestonஇல் பனிப்பாறைச் சரிவு பாதுகாப்பு குறித்த தொண்டு நிறுவன நிகழ்வு ஒன்றிற்காக ஒரு இசை நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இரண்டு ஆண்டுகளுக்குமுன் பனிப்பாறைச் சரிவில் தனது சகோதரரை இழந்த ஜஸ்டின் ட்ரூடோவும் அந்த தொண்டு நிறுவனத்தில் பங்குபெற்றிருந்தார்.

அந்த நிகழ்ச்சியின்போது அவர் ஒரு பெண் நிருபரை தவறாக தொட்டதாக உள்ளூர்பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.

அச்சம்பவம் குறித்து சமீபத்தில் ட்வீட் ஒன்றை ஒரு ப்ளாக்கர் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில் சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் அந்த பெண் நிருபரை தொடர்பு கொண்டபோது அவர் இந்த சம்பவத்துடன் தொடர்புபடுத்தப்படுவதையோ தனது பெயரை வெளியிடுவதையோ கூட விரும்பவில்லை என்று தெரியவந்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்