பிரதமர் என்னிடம் தவறாக நடந்து கொண்டது உண்மைதான்: முன்னாள் பத்திரிகையாளர் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்

Report Print Balamanuvelan in கனடா
327Shares
327Shares
lankasrimarket.com

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தன்னிடம் தவறாக நடந்து கொண்டது உண்மைதான் என முன்னாள் பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சுமார் 20 ஆண்டுகளுக்குமுன் ஒரு அரசியல்வாதியாக இல்லாதபோது, ஜஸ்டின் ட்ரூடோ ஒரு இளம் பத்திரிகையாளரிடம் தவறாக நடந்து கொண்டதாக செய்திகள் வெளியாகின.

நேரடியாக பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிடமே அவர் ஒரு பெண்ணிடம் தவறாக நடந்து கொண்டாரா என்று கேட்டபோது, தான் அவ்வாறு நடந்து கொண்டதாக தனக்கு நினைவில்லை என்று கூறினாரேயொழிய நேரடியாக பதிலளிக்கவேயில்லை.

இந்நிலையில் Rose Knight என்னும் முன்னாள் பத்திரிகையாளர் அந்த குற்றச்சாட்டு தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், அதிகரித்துவரும் ஊடகங்களின் அழுத்தம் காரணமாக மன விருப்பமின்றி நான் இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்.

2000ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் Open Eyes பத்திரிகையில் குறிப்பிடப்பட்ட பத்திரிகையாளர் நான்தான். பத்திரிகைச் செய்திகளில் வெளியானதுபோலவே, அந்த பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்த சம்பவம் உண்மையிலேயே நடந்தது.

மறுநாள் திரு,. ட்ரூடோ அவர்கள் என்னிடம் மன்னிப்பும் கேட்டார். அந்த சம்பவத்தை அப்போது நான் தொடர விரும்பவில்லை, இனியும் தொடர மாட்டேன். அதற்கு பிறகு, அவர் பிரதமராகும் முன்னும் ஆன பின்னும் அவருடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை, என்று கூறியுள்ள Rose Knight என்னும் அந்த பத்திரிகையாளர் இது குறித்து வேறு எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்