அந்த பெண் கூறுவது போல் எதுவும் நடக்கவில்லை: மறுப்பு தெரிவித்த ஜஸ்டின் ட்ரூடோ

Report Print Kabilan in கனடா
285Shares
285Shares
lankasrimarket.com

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தன் மீதான பாலியல் புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

கடந்த ஒரு வார காலமாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, பாலியல் புகார் சர்ச்சையில் சிக்கியுள்ளார். பெண் பத்திரிக்கையாளர் ஒருவர், கடந்த 2000ஆம் ஆண்டில் கொலம்பியாவில் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் ட்ரூடோ தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக புகார் கூறியிருந்தார்.

இந்நிலையில், தற்போது அந்த விடயம் தொடர்பாக குறித்த பெண் பத்திரிக்கையாளர் நாளிதழ்களில் எழுதியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கனடாவிலுள்ள செய்திகளிலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

ஆனால், குறித்த பெண்ணிடம் தான் தவறாக நடக்கவில்லை என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தற்போது மறுப்பு தெரிவித்துள்ளார்.

மேலும், இதுகுறித்து அவர் கூறுகையில் ‘20 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த சம்பவங்களை திரும்ப திரும்ப உங்களுக்கு ஞாபகப்படுத்திக் கூறிக்கொண்டே இருக்கிறேன். அந்தப் பெண்ணிடம் தவறாக நடந்து கொள்ளவில்லை என்பதில் உறுதியாக இருக்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

அதன் பின்னர், கடந்த வியாழன் அன்று விளக்கம் எதுவும் அளிக்காமல் ட்ரூடோ மன்னிப்பு மட்டும் கேட்டுக் கொண்டார்.

Reuters

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்