கனடாவில் சாதனை படைத்த இலங்கையருக்கு கிடைத்த உயரிய கெளரவம்: குவியும் பாராட்டு

Report Print Raju Raju in கனடா
285Shares
285Shares
lankasrimarket.com

இலங்கையில் பிறந்து கனடாவில் வசிக்கும் பிரபல கவிஞரும், எழுத்தாளருமான மைக்கேல் ஒண்டாட்ஜே எழுதிய நாவலுக்காக அவருக்கு Booker பரிசு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த 1943-ல் இலங்கையில் பிறந்த மைக்கேல் பின்னர் கனடாவில் குடியேறினார்.

கவிஞர், எழுத்தாளர், கட்டுரையாளர் என பன்முகத்தன்மையோடு வலம் வரும் மைக்கேல் இரண்டாம் உலக போரின் போது வாழ்ந்த நான்கு கதாபாத்திரங்களை அடிப்படையாக வைத்து The English Patient என்ற நாவலை எழுதியுள்ளார்.

இந்த நாவல் லண்டனில் நடைபெற்ற Golden Man Booker விருது விழாவில் சிறந்த நாவலாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான பரிசை மைக்கேல் ஞாயிறு அன்று நடைபெற்ற விழாவில் பெற்று கொண்டார்.

இது Booker பரிசு போட்டியின் 50-வது ஆண்டு விழா என்பது கூடுதல் சிறப்பாகும்.

The English Patient நாவலானது ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ளது.

இது குறித்து Booker பரிசு அறக்கட்டளையின் தலைவர் பரோனஸ் ஹலினா வெளியிட்டுள்ள அறிக்கையில், The English Patient நாவல் கவிதையாகவும், நல்ல தத்துவமாகவும் உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இதே போல எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள் The English Patient நாவலை பெரிதும் பாராட்டியுள்ளார்கள்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்