மனித உரிமை மீறல் அறிக்கையில் எனது பங்கு உள்ளது: கனடாவில் வசிக்கும் பாகிஸ்தானியர் தகவல்

Report Print Raju Raju in கனடா
64Shares
64Shares
lankasrimarket.com

காஷ்மீர் மனித உரிமை மீறல் தொடர்பாக ஐ.நா வெளியிட்ட அறிக்கையில் தனது பங்கு உள்ளதாக கனடாவில் வசிக்கும் பாகிஸ்தானை சேர்ந்த இமாம் ஒருவர் கூறியுள்ளார்.

காஷ்மீரில் மனித உரிமை தொடர்பான அறிக்கையை ஐ.நாவுக்கான மனித உரிமை அமைப்பு சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டது.

இதற்கு கண்டனம் தெரிவித்த இந்திய அரசு அந்த அறிக்கையை நிராகரித்திருந்தது.

இந்நிலையில், கனடாவின் யோர்க் பகுதியில் வசிக்கும் பாகிஸ்தானை சேர்ந்த இமாம் ஜபார் பங்கேஷ் என்பவர், இந்த அறிக்கையில் தனது பங்கு உள்ளதாக கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஜபார் கூறுகையில், நாங்கள் காஷ்மீரின் நண்பர்கள் என்பதை பெருமையாக சொல்வேன்.

காஷ்மீர் குறித்த ஐ.நாவின் அறிக்கையில் எனது பங்கும் உள்ளது. ஐ.நா மனித உரிமை அமைப்பிற்கான ஐ கமிஷனர் உடன் தனிப்பட்ட முறையில் ஆலோசனை நடத்தியுள்ளேன்.

இமெயில் மூலம் நான் நடத்திய ஆலோசனைக்கு கமிஷனர் பதிலளித்துள்ளார் என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்