கனடாவில் பெண் கொடூர கொலை: ஒருவர் கைது

Report Print Raju Raju in கனடா

கனடாவில் பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் பொலிசார் ஒருவரை கைது செய்துள்ளனர்.

டொரண்டோவில் உள்ள வீட்டில் 52 வயதான பெண் படுகாயங்களுடன் கிடந்தார்.

இது குறித்து அக்கம்பக்கத்தினர் பொலிசுக்கு தகவல் கொடுக்க, சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் பெண்ணை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

இதையடுத்து பெண்ணின் சடலத்துக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்ட நிலையில் அது குறித்த அறிக்கையை பொலிசார் வெளியிடவில்லை.

பொலிசார் கூறுகையில், உயிரிழந்த பெண்ணின் பெயர் கரோலின் கேம்பெல் ஆகும், இந்த கொலை வழக்கின் குற்றவாளி ஜோசிப் கார்டிலை கைது செய்துள்ளோம் என கூறியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers