முதன் முறையாக முக்கிய பொறுப்புக்கு தேர்வு செய்யப்பட்ட பெண்: எங்கு தெரியுமா?

Report Print Balamanuvelan in கனடா

கனடாவின் தொழில்முறை கால்பந்தாட்டக் குழுவின் பயிற்சியாளராக முதன்முறையாக ஒரு பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Montreal Impact என்பது கனடாவின் தொழில்முறை கால்பந்தாட்டக் குழுவாகும்.

இதில் பயிற்சியளிக்கும் பயிற்சியாளர்களில் ஒருவராக Montserrat Flores Maso என்னும் பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

16 வயதாக இருக்கும்போது பயிற்சியாளராக களமிறங்கினார் Flores.

இது 21ஆம் நூற்றாண்டு, விளையாட்டுத்துறையில் ஒரு ஆணுக்கு நிகராக பெண்ணும் செயலாற்றுவதற்கான நேரம் இது என்று கூறும் Floresஐ தேர்வு செய்த Montreal Impactஇன் ஒருங்கிணைப்பாளரான Philippe Gajevic, Flores இந்த பொறுப்பிற்கு நூறு சதவிகிதம் பொருத்தமானவர் என்கிறார்.

Floresஇடம் பயிற்சி பெறும் சிறுவர்களும் அப்படித்தான் கருதுகிறார்கள்.

அவர் எங்கள் பயிற்சியாளராக இருப்பதை பெரிதும் விரும்புகிறோம் என்னும் சிறுவர்கள், அவர் எங்களுக்கு நன்றாக பயிற்சி அளிக்கிறார், சிறந்த கால் பந்தாட்ட வீரர்களாக ஆக எங்களுக்கு உதவுகிறார் என்கிறார்கள்.

சரி, Flores என்ன சொல்கிறார்? சிறு வயதில் எனக்கு பந்தைக் கண்டாலே பயம் என்கிறார் அவர்.

இப்போது அவர் பல சிறுவர்களின் பயத்தைப் போக்கப் போகிறார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்