“இந்தியரை சுடு”, கனடாவில் துளிர் விட்ட இனவெறி: அதிரடி நடவடிக்கை எடுத்த பொலிசார்

Report Print Balamanuvelan in கனடா
451Shares
451Shares
ibctamil.com

“ஒரு இந்தியரைச் சுடு” என சமூக ஊடகத்தில் செய்தி வெளியிடுமளவிற்கு கனடாவில் துளிர் விட்ட இனவெறியை முளையிலே கிள்ளி எறியும் வகையில், செய்தி வெளியிட்ட இரண்டு பெண்களை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

கனடாவைச் சேர்ந்த Spiller என்னும் ஒரு பெண் தனது புத்தம் புதிய கார் மீது யாரோ பெயிண்டால் ஸ்பிரே செய்து வைத்திருப்பதைக் கண்டார்.

ஆத்திரமுற்ற அவர் பேஸ்புக்கில், வீட்டுக்கு வந்தால் சில இந்தியர்களைக் கொன்று விடுவேன் என்று செய்தி ஒன்றை இட்டிருந்தார்.

ஆளுக்கு ஒரு இந்தியரைச் சுடும் தினம் ஒன்றைக் கொண்டாட வேண்டும் என்றும் அவர் ஐடியா ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதற்கு பதிலளிக்கும் வகையில் Chaisson என்னும் பெண் 24 மணி நேர களையெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

அவர்களுடைய செய்திகள் ஸ்கிரீன் ஷாட் எடுக்கப்பட்டு நூற்றுகணக்கான முறைகள் ஷேர் செய்யப்பட்டன. பலர் அந்த செய்திகளுக்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.

Spiller தனது செயலுக்கு மன்னிப்புக் கேட்டார், என்றாலும் அவர் வேலையிலிருந்து தூக்கப்பட்டார்.

என்ன சொல்கிறேன் என்று தெரியாமல் கோபத்தில் சொல்லி விட்டேன், எனது புத்தம் புதிய கார் நாசம் ஆகி விட்டதே என்ற கோபத்தில்தான் அவ்வாறு செய்து விட்டேன் என்று கூறி Spiller மன்னிப்புக் கோரினார்.

ஆனால் அவர்களது சமூக ஊடகச் செய்திகள் இனவெறியைத் தூண்டுவதாக இருந்ததால் பொதுமக்கள் பலர் பொலிசாருக்கு புகாரளித்தனர்.

உடனடியாக விசாரணையைத் தொடங்கிய பொலிசார் பொதுமக்களிடம் வெறுப்பைத் தூண்டுதல் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

மக்கள் தாங்கள் சமூக ஊடகங்களில் வெளியிடும் செய்திகளுக்கு பொறுப்பேற்பதோடு கணக்கும் ஒப்புவிக்க வேண்டும் என்று பொலிஸ் செய்தி தொடர்பாளர் சார்ஜண்ட் Paul Manaigre தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் இதுபோன்ற நடத்தையைப் பொறுத்துக்கொள்ள முடியாது என்னும் கடுமையான செய்தியை நாம் பொதுமக்களுக்கு தெரியப்படுத்தியாக வேண்டும் என்றார் அவர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்