லாட்டரி சீட்டு வாங்கியதை மறந்த மூதாட்டி: பரிசாக விழுந்த $1 மில்லியன் என்ன ஆனது தெரியுமா?

Report Print Raju Raju in கனடா

கனடாவில், எப்போதும் லாட்டரி சீட்டுகள் வாங்கும் பழக்கமில்லாத மூதாட்டி யதேச்சியாக வாங்கிய லாட்டரி சீட்டுக்கு $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது.

ஒன்றாறியோவின் கிட்சனர் நகரை சேர்ந்தவர் கரோல் நிப்பெல் (68). லாட்டரி சீட்டுகளை வாங்கும் பழக்கமில்லாத கரோல் யதேச்சியாக தனது பணியிலிருந்து ஓய்வு பெற்ற நாளில் கடைக்கு போகும் போது ஒரு சீட்டை வாங்கியுள்ளார்.

அதிர்ஷ்டவசமாக கரோல் வாங்கிய சீட்டுக்கு $1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது.

இது குறித்து கரோல் கூறுகையில், லாட்டரி சீட்டை வாங்கிய ஒரு வாரத்துக்கு அதை நான் பார்க்கவில்லை.

பின்னர் கடைக்கு போகும் போது திடீரென சீட்டு ஞாபகம் வந்த நிலையில் செக் செய்த போது எனக்கு $1 மில்லியன் பரிசு விழுந்தது தெரியவந்தது.

இதை என்னால் நம்பவேமுடியவில்லை, மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்றுவிட்டேன் என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்