கடற்கரை மணலில் வேகமாக புகுந்த கார்: பதறியடித்து ஓடிய மக்கள்... அதிர்ச்சி வீடியோ

Report Print Raju Raju in கனடா
233Shares
233Shares
ibctamil.com

கனடாவில் காரை கடற்கரை மணலில் தாறுமாறாக ஓட்டி சென்று மக்களை பீதியில் ஆழ்த்திய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

ஒன்றாறியோ மாகாணத்தின் போர்ட் டோவர் நகரில் உள்ள கடற்கரை மணலில் மக்கள் பலர் உட்கார்ந்து காற்று வாங்கி கொண்டிருந்தனர்.

அப்போது நீல நிற கார் ஒன்று மணலில் பின்நோக்கி சென்றது. பின்னர் திடீரென காரை அதன் ஓட்டுனர் வேகமாக செலுத்திய நிலையில் அங்கிருந்த மக்கள் தங்கள் மீது கார் மோதிவிடும் என அச்சத்தில் அங்குமிங்கும் ஓடினார்கள்.

பின்னர், சிலர் காரை நிறுத்தி உள்ளிருந்த ஓட்டுனரை வெளியில் இழுத்ததோடு அவரை பொலிசில் ஒப்படைத்தனர்.

இதையடுத்து ஓட்டுனர் மீது ஆபத்தாக வாகனத்தை ஓட்டியது உட்பட மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்