மகனோடு சேர்ந்து உயிரைவிட்ட தாய்: கதறிய தந்தை! புலம்பெயர்ந்த குடும்பத்துக்கு நேர்ந்த சோகம்

Report Print Raju Raju in கனடா
465Shares
465Shares
ibctamil.com

கனடாவில் நீச்சல் குளத்தில் சிறுவன் மூழ்கிய நிலையில் அவனை காப்பாற்ற முயன்ற தாயும் நீரில் மூழ்கி இறந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிராம்டன் நகரை சேர்ந்தவர் இம்மானுவேல் அக்ரோங், இவர் மனைவி எலிசபெத், தம்பதிக்கு 5 வயதில் மகன் உள்ளான்.

இம்மானுவேல் குடும்பம் கடந்த 2011-ல் கானா நாட்டிலிருந்து கனடாவுக்கு புலம்பெயர்ந்தனர்.

இந்நிலையில் இம்மானுவேலின் மகன் தனது வீட்டின் பின்புறம் உள்ள நீச்சல்குளத்தில் நேற்று விழுந்து மூழ்க தொடங்கினான்.

சிறுவனின் சத்தம் கேட்டு அங்கு வந்த தாய் எலிசபெத் மகனை காப்பாற்ற முயன்றார்.

முடியாத காரணத்தால் உடனடியாக கணவருக்கு போன் செய்து, நம் மகன் தண்ணீரில் மூழ்கி மெதுவாக இறந்து கொண்டிருக்கிறான் என கதறியுள்ளார்.

இதையடுத்து பக்கத்தில் வேலையாக சென்றிருந்த இம்மானுவேல் சம்பவ இடத்துக்கு வந்த நிலையில் அவரின் குரல் கேட்டு பக்கத்து வீட்டுக்காரரான அஞ்சும் அங்கு வந்து உதவ முயன்றார்.

அப்போது எலிசபெத்தும் சிறுவனோடு சேர்ந்து நீரில் மூழ்கினார்.

இதையடுத்து இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்தது தெரியவந்தது.

பின்னர் சிகிச்சை பலனின்றி எலிசபெத்தும் உயிரிழந்தார், மனைவி மற்றும் மகனின் இழப்பு இம்மானுவேலை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இம்மானுவேல் கூறுகையில், அன்பான மனைவியையும், மகனையும் இழந்தது வேதனையளிக்கிறது.

சில வினாடிகளில் தண்ணீர் அவர்களை உயிரை பறித்துவிட்டது என்பதை நம்பமுடியவில்லை என கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்