கனடாவில் பயங்கர காட்டுத்தீ: வான்கூவர் தீவில் அவசர நிலை பிரகடனம்

Report Print Balamanuvelan in கனடா

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா பகுதியில் வான்கூவர் தீவில் அமைந்துள்ள Nanaimo நகருக்கு மேற்காக காட்டுத்தீ பரவி வருவதையடுத்து உள்ளூர் நிர்வாகம் அவசர நிலையை பிரகடனப் படுத்தியுள்ளது.

கடைசியாக கணக்கிடும்போது 107 ஹெக்டேர்களை கபளீகரம் செய்திருந்த காட்டுத்தீ, சில மணி நேரங்களில் இரு மடங்காக அதிகரித்துள்ளதாக பிரிட்டிஷ் கொலம்பியா தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது.

இதனால் Nanaimo நிர்வாகம் நேற்றிரவு 7.45 மணியளவில் அவசர நிலையை பிரகடனம் செய்ததோடு தீப்பற்றி எரியும் பகுதிக்கு மேற்காக அமைந்துள்ள சில வீடுகளிலுள்ளவர்களை வீடுகளை காலி செய்யுமாறு உத்தரவிட்டுள்ளது.

மேலும் 77 வீடுகளுக்கு வீடுகளை காலி செய்ய தயாராக இருக்குமாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் காட்டுத்தீ தீவிரம் அடைந்து வருவதால் அதைக் கட்டுப்படுத்துவதற்கு உதவுவதற்காக சர்வதேச உதவிக் குழுக்கள் பிரிட்டிஷ் கொலம்பியாவுக்கு வர இருக்கிறார்கள்.

மெக்சிகோ, நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த உதவிக் குழுக்கள் வர இருக்கின்றன.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்