காட்டுத்தீயை கட்டுப்படுத்த பல மில்லியன் தொகை ஒதுக்கீடு

Report Print Kavitha in கனடா

பிரிட்டிஷ் கொலம்பியாவில் 1,565 காட்டுத்தீச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும் இதனால் 1,180 சதுர கிலோமீடடர் பரப்பளவு தீக்கிரையாகியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அண்மைய தகவலின் படி, பிரிட்டிஷ் கொலம்பியாவில் 476 இடங்களில் காட்டுத்தீ பரவி வருவதாக அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்நிலையில் ஒன்ராறியோ மாகாண அரசாங்கம், காட்டுத்தீயினைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக, மேலும் நூறு மில்லியன் டொலர்களை ஒதுக்கியுள்ளது.

ஏற்கனவே காட்டுத்தீக்கு எதிராக போராடுவதற்காக 70 மில்லியன் டொலர்கள் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் தற்போது நூறு மில்லியன் டொலர்களை வழங்க, டக் ஃபோர்ட் தலைமையிலான முற்போக்கு பழமைவாதக் கட்சி அரசாங்கம் முன்வந்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்