பொலிஸ் சீருடைக்குப் பின்னாலும் மனிதர்கள்தான் இருக்கிறார்கள்: கனடா மனோதத்துவ நிபுணர்கள்

Report Print Balamanuvelan in கனடா

வெள்ளிக்கிழமை காலை Frederictonஇல் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டது பொலிசாரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள நிலையில், பொலிஸ் சீருடைக்குப் பின்னாலும் மனிதர்கள்தான் இருக்கிறார்கள், அவர்களது சகாக்களின் மரணம் அவர்களது வாழ்வில் நீண்டகால தாக்கத்தை ஏற்படுத்தும் என கனடா நாட்டு மனோதத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வெள்ளிக்கிழமை காலை Frederictonஇல் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் Robb Costello மற்றும் Sara Burns என்னும் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர்.

Matthew Vincent Raymond என்னும் ஒருவன் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டில் Bobbie Lee Wright மற்றும் அவரது நண்பரான Donnie Robichaud ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவத்தையடுத்து தகவலறிந்து வந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகளான Robb Costello மற்றும் Sara Burns ஆகியோரும் அந்த கொலைகாரனால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த சம்பவம் மற்ற பொலிசாரிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மனோதத்துவ நிபுணர் ஒருவர் தங்கள் சகாக்கள் பணியிலிருக்கும்போது உயிரிழந்ததைக் கண்ட மற்ற பொலிசாருக்கு அந்த கோர சம்பவத்தின் தாக்கம் பலத்த பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளனர்.

Katy Kamkar என்னும் மனோதத்துவ நிபுணர் கூறும்போது, பொலிஸ் சீருடைக்குப் பின்னாலும் மனிதர்கள்தான் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்வது மிகவும் அவசியம் என்று தெரிவித்துள்ளார்.

ஓரிடத்தில் குழப்பம் என்று தெரியவரும்போது நாம் அங்கிருந்து தப்பி ஓடுகிறோம், ஆனால் அவர்களோ அந்த சம்பவம் நடந்த இடத்தை நோக்கி ஓடுகிறார்கள் என்னும் அவர், பொலிசாரின் மன நல பிரச்சினைகளுக்கு உதவும் அமைப்பு ஒன்றின் தலைவராகவும் இருக்கிறார்.

கனடாவைப் பொருத்தவரையில் பணியிலிருக்கும்போது உயிரிழப்பவர்களில் டாக்சி டிரைவர்களுக்கு அடுத்து அதிகம் உயிரிழப்பவர்கள் பொலிசார்தான்.

1961க்கும் 2009க்கும் இடையே கனடாவில் 133 பொலிஸ் அதிகாரிகள் பணியிலிருக்கும்போது கொல்லப்பட்டதாக ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்