கனடாவில் பாதசாரி மீது கொலைவெறித் தாக்குதல்: ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட இளைஞர்

Report Print Arbin Arbin in கனடா

டொரண்டோவின் மேற்கு பகுதியில் வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று பாதசாரி மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இளைஞர் ஒருவர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் தொடர்பாக பேசிய டொரண்டோ மருத்துவ உதவிக் குழுவினர், இரவு சுமார் 11.30 மணியளவில் Martin Grove Road மற்றும் John Garland Boulevard பகுதி அருகே இருந்து அவசர அழைப்பு வந்தது.

இதனையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்ததாகவும், அங்கு துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து கவலைக்கிடமான நிலையில் நபர் ஒருவரை மீட்டு மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

30 வயது மதிக்கத்தக்க அந்த நபர் தற்போது தீவிர சிகிச்சை பிரிவில் சேர்ப்பித்துள்ளதாகவும், ஆபத்து கட்டத்தை இன்னும் தாண்டவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

பெண்மணி ஒருவரும் படுகாயமடைந்த நபருடன் மருத்துவமனை சென்றுள்ளதாகவும், ஆனால் அவருக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

குறித்த சம்பவத்தில் 3 அல்லது நான்கு முறை துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் பொலிசாரிடம் தெரிவித்துள்ளனர்.

மட்டுமின்றி தாக்குதலை நடத்திவிட்டு வாகனம் ஒன்று சம்பவப்பகுதியில் இருந்து விரைந்துள்ளதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சில்வர் வண்ண கார் ஒன்றில் குற்றவாளி தப்பியதாக கூறும் பொலிசார், பொதுமக்கள் இந்த வழக்கு தொடர்பாக உதவ வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் குறித்த சம்பவத்தில் ஈடுபட்டது கும்பலா அல்லது ஒரே ஒரு நபரா என்பது தொடர்பில் விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்