குழந்தையை கருக்கலைப்பு செய்யாவிட்டால் நீ இறந்து விடுவாய் என்று கடவுள் சொன்னார்: ஒரு வித்தியாசமான வழக்கு

Report Print Balamanuvelan in கனடா

டொரண்டோவைச் சேர்ந்த ஒரு பாதிரியார் தனது காதலியிடம் உன் வயிற்றில் வளரும் குழந்தையை கருக்கலைப்பு செய்யாவிட்டால் நீ இறந்து விடுவாய் என்று கடவுள் என்னிடம் சொன்னார் என்று சொன்னதாக அந்த பெண் தெரிவித்தார்.

டொரண்டோவைச் சேர்ந்த Martin Kofi Danso என்னும் ஒரு பாதிரியார் தனது காதலியான Chris-Ann Bartley தான் கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தபோது அவரைக் கருக்கலைப்பு செய்ய வைப்பதற்காக இவ்வாறு கூறியுள்ளார்.

ஏற்கனவே திருமணமாகி நான்கு குழந்தைகளுக்கு தந்தையான Martin, தனது காதலியான Bartleyயின் வயிற்றில் வளரும் குழந்தைக்கு தந்தை யார் என்பதை அறியும் சோதனை செய்வதற்காகவும், அது தொடர்பான விடயங்கள் எதுவும் ஊடகங்களில் வராமல் இருப்பதற்காக தடை கோரும் வழக்கு ஒன்றையும் தொடர்ந்தார்.

தான் Bartleyயுடன் நெருக்கமாக இருக்கவேயில்லை என்று அவர் கூறியதை ஏற்றுக் கொண்ட நீதிபதி அவரது வேண்டுகோளையும் ஏற்றுக் கொண்டார்.

இன்னொருவருக்கு பிறந்த குழந்தையை வளர்ப்பதற்கு தான் பணம் செலவழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் Bartley தன் மீது குற்றம் சாட்டுவதாகவும் Martin தெரிவித்திருந்தார்.

ஆனால் தங்கள் இருவருக்கும் தொடர்பு இருந்தது என்று கூறிய Bartley, 2014 முதல் 2017 வரை தங்களுக்கிடையே நெருக்கமான உறவு இருந்தது என்று கூறியதோடு அதை நிரூபிக்கும் ஆதாரங்களையும் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அதே நேரத்தில் தந்தையை அறியும் சோதனையின் முடிவுகள், 99.9996 சதவிகிதம் குழந்தையின் தந்தை Martinஆகத்தான் இருக்க முடியும் என்று தெரிவித்தன.

பின்னர் அப்படியே பல்டி அடித்த Martin, Bartley தன்னை மயக்கி ஏமாற்றி விட்டதாகவும், தான் திருமணமானவன் என்பதால், திருமண ஒப்பந்தத்தை மீறி விட்டதால் பயந்து Bartleyயுடனான உறவை ஒப்புக் கொள்ளாமல் இருந்ததாகவும், அந்த உறவு தவறான ஒன்று, அது நிகழ்ந்திருக்கவே கூடாது என்றும் கூறினார்.

அதனால் இதை ஏற்றுக் கொள்ளாத நீதிபதி ஊடகத் தடை விதிக்க மறுத்து விட்டார்.

தங்களுக்குள் நெருக்கமான உறவு இருக்கிறது என்பது தெரிந்தும், இந்த விடயத்தை வெளியில் கொண்டு வந்தது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ள நீதிபதி, குழந்தையின் பெற்றோர்கள் நினைத்தால் தங்கள் குழந்தையின் நலன் கருதி வேறெந்த தகவல்களும் வெளியாகாமல் பிரச்சினைகளை தங்களுக்குள் தீர்த்துக் கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்