நான் இறக்க போகிறேன்! பெண்ணுக்கு நேர்ந்த பயங்கரம்... சிசிடிவி காட்சி வெளியானது

Report Print Raju Raju in கனடா

கனடாவில் பெண்ணொருவர் துப்பாக்கி முனையில் நபரால் கடத்தப்பட்ட வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒன்றாறியோவில் உள்ள ரிச்மண்ட் ஹில்லில் இருக்கும் ஒரு வீட்டுக்கு பெண் வந்தார்.

வீட்டு காலிங் பெல்லை அவர் அழுத்திய நிலையில் யாரும் கதவை திறக்கவில்லை.

அப்போது அங்கு காரில் வந்த மர்ம நபர் கையில் துப்பாக்கியுடன் பெண்ணின் அருகில் வந்தார். பின்னர் அவர் தலைமுடியை தரதரவென இழுத்தப்படி காரில் கடத்தி சென்றார்.

அப்போது அந்த பெண், நான் இறக்க போவதாக நினைக்கிறேன் என கத்தினார். இவையனைத்தும் அங்கிருக்கும் சிசிடிவி கமெராவில் பதிவாகியுள்ளது.

இந்த வீடியோவை பொலிசார் வெளியிட்டுள்ள நிலையில் பெண்ணை கடத்திய நபரின் அங்க அடையாளங்களையும் வெளியிட்டுள்ளனர்.

குற்றவாளி குறித்து தகவல் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்குமாறு பொலிசார் கோரியுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...