பிரபல தமிழ் நடிகருக்கு பார்வையில்லாத கனடா ரசிகை கொடுத்த இன்ப அதிர்ச்சி

Report Print Raju Raju in கனடா

கனடாவை சேர்ந்த கண் பார்வையில்லாத ரசிகை நடிகர் விஷாலுக்கு கேடயம் வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

விஷால் நடித்த இரும்புத்திரை படத்தில் 100-வது நாள் விழா நேற்று சென்னையில் நடைபெற்ற நிலையில் விஷால் தனது ரசிகர் மன்றத்தை மக்கள் நல இயக்கமாக மாற்றுவதாக அறிவித்தார்.

இந்த விழாவில் அப்படத்தில் பணியாற்றிய அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் கேடயம் வழங்கப்பட்ட நிலையில் விஷாலுக்கு மட்டும் வழங்கப்படவில்லை.

இது குறித்து விஷால் கூறுகையில், கனடாவில் அக்ஷயா என்று எனக்கு ரசிகை ஒருவர் உள்ளார்.

கண் பார்வையில்லாத அவர் நான் நடித்த 24 படங்களையும் காதுகளால் கேட்டுள்ளார்.

அப்படிப்பட்ட ரசிகையின் கையால் இரும்புத்திரை படத்தின் கேடயத்தை பெற விரும்பினேன்.

இதையடுத்து சென்னைக்கு வந்த அக்சயாவின் கைகளால் அந்த கேடயத்தை ஏற்கனவே பெற்று விட்டேன் என நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்