ரொறொன்ரோ ரயில் நிலையம் அருகே பட்டப்பகலில் பெண் பாலியல் பலாத்காரம்

Report Print Arbin Arbin in கனடா
199Shares
199Shares
lankasrimarket.com

கனடாவின் ரொறொன்ரோ நகர சுரங்க ரயில் நிலையம் வெளியே பெண் ஒருவர் பட்டப்பகலில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரொறொன்ரோ நகர சுரங்க ரயில் நிலையம் வெளியே 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நினைவிழந்த நிலையில் கிடந்துள்ளார்.

இந்த நிலையில் கருப்பு சட்டை அணிந்த 60 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் குறித்த பெண்ணை பாலியல் துஸ்பிரயோஅம் செய்துள்ளதாக கூறப்படுகிறது,

சனிக்கிழமை மாலை நடந்த இச்சம்பவத்தை அதுவழியாக சென்ற பலரும் பார்த்துள்ளனர். சிலர் அந்த நபரை கோபமாக திட்டியதன் பின்னர் அவர் அங்கிருந்து மாயமானதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பில் தகவல் அறிந்து வந்த பொலிசார், குறித்த பெண்ணை மீட்டதுடன், அந்த 60 வயது நபரை தேடி வருகின்றனர்.

குறித்த நபர் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாரை அணுக வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

கருப்பு உடையில் இருந்த அந்த நபரை சம்பவயிடத்தில் பார்த்த பொதுமக்கள் இந்த விவகாரத்தில் பொலிசாரை உதவ முன்வர வேண்டும் என ரொறொன்ரோ நகர பொலிசார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்