கடற்கரையில் சடலமாக கிடந்த ஏழு வயது சிறுவன்: தாய்க்கு நேர்ந்த கொடுமை

Report Print Raju Raju in கனடா
152Shares
152Shares
lankasrimarket.com

கனடாவில் கடற்கரையில் இளம் தாய் கடந்த வாரம் சடலமாக கண்டெடுக்கப்பட்ட நிலையில் அவரின் 7 வயது மகனும் தற்போது சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளான்.

Saskatchewan மாகாணத்தில் கடந்த 24-ஆம் திகதி கிரீகன் கெல்டன்ஹஸ் (7) என்ற சிறுவன் காணாமல் போனான்.

இந்நிலையில் 25-ஆம் திகதி கீரிகனின் தாய் தமைன் அங்குள்ள கடற்கரையில் சடலமாக பொலிசாரால் கண்டெடுக்கப்பட்டார்.

இதையடுத்து கிரீகனை தேடி வரும் பணி நடைபெற்றது.

தற்போது கிரீகனும் கடற்கரை பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளான்.

தாயும், மகனும் ஒன்றாக கடற்கரைக்கு வந்த போது தண்ணீரில் சிக்கியிருக்கலாம் என பொலிசார் கருதுகிறார்கள்.

இருவரும் கொல்லப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் கிடைக்காத நிலையில் இதை விபத்தாகவே பொலிசார் பார்க்கிறார்கள்.

ஆனாலும் கீரினின் பிரேத பரிசோதனை முடிவுக்கு பின்னர் அவர் இறப்புக்கான காரணம் தெரியவரும் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்