இளம்பெண்ணை ஓடி வந்து கட்டியணைத்த அழகிய மான்: வைரலாகும் புகைப்படம்!

Report Print Vijay Amburore in கனடா

கனடாவில் உள்ள ஏரிப்பகுதியில் தனியாக சுற்றிக் கொண்டிருந்த மான் ஒன்று தீயணைப்பு படையை சேர்ந்த பெண் ஒருவரை ஓடி வந்து கட்டியணைக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

கனடாவின் Burns ஏறி அருகே முகாமிட்டிருந்த தீயணைப்பு படை வீரர்களை தெற்குப்பகுதியில் உள்ள Francois ஏரிக்கு அழைத்து செல்வதற்காக சென்ற போது தான் அந்த புகைப்படத்தை எடுத்தேன் என விவரிக்கிறார் பேருந்து ஓட்டுநர் Jan Giesbrecht.

அன்றைய தினம் அவர்களை அழைத்து செல்வதற்காக நின்று கொண்டிருந்த போது, நீண்ட நேரமாக அப்பகுதியில் தனியாக சுற்றிக்கொண்டிருந்த மான் ஒன்று, திடீரென எங்களை நோக்கி நடந்து வந்தது.

பின்னர் அங்கு நின்று கொண்டிருந்த பெண் தீயணைப்பு வீரர் ஒருவரின் அருகில் சென்று அவரை தழுவியது. அதனை தொடர்ந்து, பேருந்தின் உட்பகுதியில் ஏற முயற்சி செய்தது என கூறியுள்ளார்.

மேலும் தான் அந்த புகைப்படத்தை பதிவிட அடுத்த சில மணிநேரங்களில் 2,200 பேர் பகிர்ந்துள்ளனர் என விவரித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers