வவ்வால்களைத் தேடிச் செல்லும் உயிரியலாளர்கள்: சுவாரஸ்யப் பின்னணி

Report Print Balamanuvelan in கனடா

ஒரு காலத்தில் கனடாவின் Nova Scotia பகுதியில் கோடைக்காலத்தின் இரவுகளில் ஏராளமான வவ்வால்கள் இரை தேடி பறந்து செல்வதைக் காணலாம். ஆனால் 2011ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளை மூக்கு நோய் வவ்வால்களை வாரிக் கொண்டு போய் விட்டது.

அந்த நோயை ஏற்படுத்துவது ஒரு பூஞ்சை வகை நோய்க் கிருமி. சிறிய பழுப்பு நிற வவ்வால், நீண்ட காதுடைய வவ்வால் மற்றும் மூவர்ண வவ்வால் என மூன்று வகை வவ்வால்கள் பெருமளவு அழிந்து விட்டன.

நூற்றுக்கணக்கான இறந்த வவ்வால்களை நாங்கள் கண்டோம் என்கிறார் வன உயிரியலாளரான Lori Phinney.

அவைகளின் இறப்பு விந்தையானது. அந்த பூஞ்சைக் கிருமி மிக வேகமாக தொற்றக்கூடியது.

குளிர்காலத்தில் பலதரப்பட்ட விலங்குகள் 'ஹைபர்னேஷன்' எனப்படும் ஆழ்நிலைத் தூக்கத்திற்கு சென்று விடும்.

அந்த நேரத்தில் குளிரைத் தாங்குவதற்காக அவை ஒன்றையொன்று ஒன்று நெருக்கமாக அணைத்தபடி உறங்கும்.

அப்படி உறங்கும்போது இந்த கிருமி ஒரு வவ்வாலிடமிருந்து மற்ற வவ்வால்களுக்கு பரவிவிடும்.

இதனால் அவைகளுக்கு ஒரு வித எரிச்சல் ஏற்படுவதால் ஆழ்நிலைத் தூக்கத்திலிருந்து இடையிலேயே எழுந்துவிடும்.

குளிர் காலத்தில் எழுவதால் அவைகளுக்கு உண்ணுவதற்கு பூச்சிகள் இருக்காது. வெறும் உறங்குவதற்கு மட்டுமே உடலில் சக்தி இருக்கும் நிலையில் தூக்கம் கலைந்து இடையில் எழும் அவற்றிற்கு உணவும் இல்லாததால் அவற்றில் பெரும்பாலானவை இறந்துவிடும்.

இதனால் வவ்வால்களில் வெறும் ஐந்து சதவிகிதம் மட்டுமே உயிர்பிழைக்கும். Lori Phinney வவ்வால்களுக்குப் பின்னால் அலைவதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.

Nova Scotia பகுதி விவசாயத்தை நம்பியிருக்கும் ஒரு பகுதி. இங்கு விவசாயம் செய்யப்படும்போது பயிர்களை ஒருவித அந்துப்பூச்சிகள் அதிகமாக அழித்துவிடும்.

ஐந்த அந்துப்பூச்சிகள்தான் வவ்வால்களின் முக்கிய உணவு. ஒரு வவ்வால் ஒரு மணி நேரத்தில் 1000 அந்துப்பூச்சிகள் வரை சாப்பிட்டு விடும். இதனால் பயிர்கள் காப்பாற்றப்படும்.

Lori Phinneyயும் அவரது சகாக்களும் வவ்வால்கள் எங்கு வசிக்கின்றன என்பதைக் கண்டறிந்து அவைகளைக் காக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதோடு, எந்த இடத்திற்கு அவை ஆழ்நிலைத்தூக்கத்திற்கு செல்கின்றன என்பதைக் கண்டறிந்து அந்த இடங்களைக் காக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers