கனடாவில் வீடு புகுந்து சிறுமிக்கு பாலியல் துஸ்பிரயோகம்: கமெரா காட்சிகளை வெளியிட்ட பொலிஸ்

Report Print Arbin Arbin in கனடா

கனடாவின் ஒன்டாரியோ மாகாணத்தில் வீடு புந்து சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து தப்பிய மர்ம நபரை பொலிசார் தேடி வருகின்றனர்.

இந்த விவகராம் தொடர்பாக Peel பகுதி பொலிசார் பொதுமக்களிடம் உதவ வேண்டும் என்று கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

ஞாயிறு அன்று அதிகாலை நேரம் Brampton பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. 16 வயதுக்கும் குறைவான அந்த சிறுமியை தாக்கி குறித்த நபர் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

சிறுமி தொடர்பில் மேலதிக தகவல்களை வெளியிட பொலிசார் மறுத்துள்ளனர். மேலும் சம்பவம் நடந்தபோது பதிவான கண்காணிப்பு கமெரா காட்சிகளை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.

அதில் பதிவாகியிருக்கும் நபர் தொடர்பில் தகவல் தெரியவரும் பொதுமக்கள் பொலிசாரை அணுகி தகவலை பகிர்ந்துகொள்ள கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers