நான் உங்கள் வீட்டிற்குள் நடப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறேன்: கனடா பெண்ணுக்கு கடிதத்தில் வந்த அதிர்ச்சி

Report Print Balamanuvelan in கனடா

கனடாவின் Saskatoonஇல் வசிக்கும் பெண் ஒருவருக்கு ஒரு கடிதம் வந்தது. அந்த கடிதத்தை படித்ததும் Shelan Faith என்னும் அந்தப் பெண் அப்படியே அதிர்ந்துபோய் உட்கார்ந்து விட்டார்.

அந்த கடிதத்தில் Shelan Faith எப்படி இருப்பார், அவர் வீட்டு அழைப்பு மணியை யாரெல்லாம் அழுத்தினார்கள், அவரது குழந்தையின் படுக்கையறை எப்படி இருக்கும் என்ற விவரங்கள் அனைத்தும் விவரிக்கப்பட்டிருந்தன.

சில நாட்கள் என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போனார் Shelan Faith. அவரது வீட்டில் பாதுகாப்புக்காக பொருத்தப்பட்டிருந்த கெமராக்கள் இணைக்கப்பட்டிருந்த கணினி அதே நிறுவனத்தைச் சேர்ந்த பாதுகாப்புக் கருவியை பொருத்தியிருந்த இன்னொருவரின் கணினிக்கு இந்த தகவல்களை அனுப்பியிருந்தது பின்னர் கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த நபர்தான் Shelan Faithக்கு இந்த தகவல்களை அனுப்பியிருந்தார். அவர் Shelan Faithஐ அச்சுறுத்துவதற்காக அந்த கடிதத்தை அனுப்பாமல் அவரை எச்சரிப்பதற்காகவே அனுப்பியதாக அவர் தெரிவித்தார்.

தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கெமராக்களை அகற்றிய Shelan Faith, அவற்றை பொருத்திய நிறுவனத்திற்கு தகவலளித்ததோடு இனி அவற்றை பயன்படுத்த விரும்பவில்லை என்றும் தெரிவித்துவிட்டார்.

பின்னர் ஆய்வு செய்ததில் அந்த கெமரா மற்றும் கணினிகளைப் பொருத்திய நபர் அவற்றை இயக்குவதற்கு தனது இமெயில் முகவரியை பயன்படுத்தியதும், இன்னொரு வாடிக்கையாளருக்கு இமெயில் முகவரி இல்லாததால் அவருக்கும் இதே இமெயில் முகவரியையே பயன்படுத்தியதால் இரண்டு கணினிகளுக்கும் தற்செயலாக இணைப்பு ஏற்பட்டு விட்டதும் தெரிய வந்தது.

தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ள பாதுகாப்பு அமைப்பு நிறுவனம் அதற்கான தொகையை திருப்பி அளித்துள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers