கனடாவுக்கு வருகை தந்த வெளிநாட்டு பெண்ணுக்கு நேர்ந்த சோகம்

Report Print Raju Raju in கனடா

பெல்ஜியம் நாட்டை சேர்ந்த பெண் கனடாவில் கொலை செய்யப்பட்ட நிலையில் சம்பவம் குறித்து பொலிசார் விசாரித்து வருகிறார்கள்.

அமிலி கிறிஸ்டிலி சகலீஸ் (28) என்ற பெண் பெல்ஜியமிலிருந்து கனடாவுக்கு வந்த நிலையில் கடந்த மாதம் 22-ஆம் திகதி வான்கவருக்கு லிப்ட் கேட்டு செல்ல முயன்றுள்ளார்.

அன்று இரவு போஸ்டன் பார் அருகில் பெண் ஒருவர் இறந்து கிடப்பதாக பொலிசாருக்கு தகவல் தரப்பட்ட நிலையில் சம்பவ இடத்துக்கு பொலிசார் வந்தனர்.

அப்போது அங்கு அமிலி கொலை செய்யப்பட்டு சடலமாக கிடந்தார்.

இது சம்மந்தமாக நபர் ஒருவரை கைது செய்த பொலிசார் பின்னர் அவரை விடுவித்தனர்.

தற்போது தான் இறந்த அமிலி, பெல்ஜியமை சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது.

சம்பவ இடத்தில் இருந்த காரையும் பொலிசார் கைபற்றியுள்ளார்கள்.

இது தொடர்பாக யாருக்கேனும் தகவல் கிடைத்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ள பொலிசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers