ஹோட்டல் படுக்கையறையில் ரகசிய கெமரா: அதிர்ந்து போன பிரித்தானிய தம்பதி

Report Print Balamanuvelan in கனடா

விடுமுறைக்காக கனடா சென்ற ஒரு பிரித்தானிய தம்பதி தங்கள் படுக்கையறையில் வைக்கப்பட்டிருந்த கடிகாரம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரகசிய கெமராவைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

Dougie Hamilton (34) தனது காதலியுடன் விடுமுறைக்காக சென்ற இடத்தில் டொரண்டோவில் ஹோட்டல் அறை ஒன்றில் தங்கினார்.

தற்செயலாக படுக்கைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த கடிகாரம் ஒன்றைப் பார்த்த Hamilton, அதில் ஏதோ வித்தியாசமாக இருப்பதை உணர்ந்தார்.

அதை எடுத்து பார்த்தபோதுதான், அது ஒரு கெமரா என்பதும், அது சார்ஜர் போன்ற ஒரு பொருளுடன் இணைக்கப்பட்டிருந்ததையும் அவர் கண்டு பிடித்தார்.

ஒன்றும் தெரியாமல் வரும் தம்பதிகளின் படுக்கையை நோக்கி வைக்கப்பட்டிருந்த அந்த கெமரா, தம்பதிகள் படுக்கையில் நெருக்கமாக இருப்பதை படம் பிடித்து அதை தவறாக பயன்படுத்தும் நோக்கில் வைக்கப்பட்டிருக்கலாம் என Hamilton கருதுகிறார்.

பொலிசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில் சம்பவம் குறித்து பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் அவர்கள் தங்கியிருந்த அறையின் உரிமையாளர் அறைக்கான கட்டணத்தைத் திருப்பிக் கொடுப்பதாகவும், அந்த அறையில் தங்க முன்பதிவு செய்துள்ளவர்களின் முன்பதிவு ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers