கனடாவில் கப்பலில் பயணிக்கையில் காணாமல் போன பிரபல பாடகர்: தேடும் பணி தீவிரம்

Report Print Raju Raju in கனடா
54Shares
54Shares
lankasrimarket.com

கனடாவில் கப்பலில் பயணிக்கும் போது காணாமல் போன ஜேர்மனியை சேர்ந்த பாடகர் டேனியல் கண்காணிப்பு விமானம் மூலம் தேடப்பட்டு வருகிறார்.

Newfoundland and Labrador மாகாணத்துக்கு வந்த 33 வயதான டேனியல் குயூபில்போக் பயணிகள் கப்பலில் நேற்று பயணம் செய்த நிலையில் திடீரென மாயமானார்.

இதையடுத்து The Maritime Rescue Sub Centre நிறுவனம் மூலம் டேனியலை தேடும் பணி நடைபெற்று வருகிறது.

ஹெலிகாப்டர், கண்காணிப்பு விமானம் மற்றும் கப்பல்கள் மூலம் டேனியல் தேடப்பட்டு வருகிறார்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்