கனடாவில் 247 பெண்களுக்கு ஈமெயில் அனுப்பிய இளைஞர்: வினோத பின்னணி

Report Print Vijay Amburore in கனடா
170Shares
170Shares
lankasrimarket.com

கனடாவில் இரவு நேரத்தில் சந்தித்த பெண்ணை மீண்டும் கண்டுபிடிப்பதற்காக, அவருடைய பெயர் கொண்ட 247 பெண்களுக்கு இளைஞர் ஒருவர் ஈமெயில் அனுப்பியுள்ள வினோத சம்பவம் நடந்துள்ளது.

கனடாவை சேர்ந்த Carlos Zetina என்ற இளைஞர், ஒரு இரவு நேரத்தில் Nicole என்ற பெண்ணை சந்தித்து அவருடைய போன் நம்பர் வாங்கியுள்ளார்.

அதன் பிறகு போன் செய்து பார்த்த பொழுது நம்பர் தவறாக இருப்பது தெரியவந்துள்ளது. அந்த பெண்ணின் முழுப்பெயரும் தெரியாத காரணத்தினால், அவரை கண்டுபிடிக்கமுடியாமல் திணறியுள்ளார்.

இதனையடுத்து அந்த பெண்ணின் பெயர் கொண்டு கால்கரி பல்கலைக்கழகத்தில் பயிலும் 247 பெண்களுக்கு ஈமெயில் அனுப்பியுள்ளார்.

அதில், நேற்று இரவு சந்தித்த பொழுது தவறான எண்ணை கொடுத்து விட்டீர்கள்' என குறிப்பிட்டிருந்தார். இந்த விவகாரம் தற்போது விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து, Zetina-விற்கு ஈமெயில் மூலம் நண்பர்களான மற்ற Nicole உதவ முன்வந்துள்ளனர்.

முகப்புத்தகத்தில் 'Nicole From Last Night' என்ற புதிய பக்கம் ஒன்றினை துவங்கி அதன் மூலம் நண்பர்களான Nicole பெயர் கொண்ட 15 பெண்கள் சமீபத்தில் பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகே சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

மேலும் அடுத்து நடைபெற உள்ள சந்திப்பில் 25 பெண்கள் கலந்துகொள்ள உள்ளதாகவும், அதில் Zetina தேடிக்கொண்டிருக்கும் Nicole கண்டிப்பாக கலந்துகொள்வார் என அனைவரும் ஆவலாக எதிர்ப்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்