இளைஞர் கொலை வழக்கில் தடுமாறும் பொலிஸ்: கதறும் தாயார்

Report Print Arbin Arbin in கனடா
116Shares
116Shares
lankasrimarket.com

கனடாவில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் கொல்லப்பட்ட அப்பாவி இளைஞர் தொடர்பில் கொலைகாரனை இனம்காண பொதுமக்கள் முன்வர வேண்டும் என ரொறொன்ரோ பொலிசார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த 2016 ஆம் ஆண்டு 26 வயதான Kiesingar Gunn துப்பாக்கியால் தலையில் சுடப்பட்டு அதே நாள் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் மரணமடைந்தார்.

இந்த விவகாரம் தமது வாழ்க்கையை மாற்றியுள்ளதாக கூறும் குறித்த இளைஞரின் தாயார் Evelyn Fox, ஒரு நபரின் பொறுப்பற்ற செயல்களால் காலம் முழுக்க தாம் மனமுடைந்து வாழ வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளேன் என்றார்.

இந்த வழக்கு தொடர்பில் இதுவரை எவரையும் கைது செய்யாத நிலையில், கொலைகாரன் தொடர்பில் தகவல் தெரிவிப்பவர்களுக்கு $50,000 வெகுமானம் அளிக்கப்படும் என பொலிசார் அறிவித்துள்ளனர்.

சம்பவத்தன்று வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ள நண்பர் ஒருவரை காப்பாற்றும் நோக்கில் சம்பவம் நடந்த பகுதிக்கு Gunn சென்றுள்ளார்.

பிறந்தநாள் கொண்டாட்டம் ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் அதிகாலை 4 மணியளவில் வீட்டுக்கு செல்லும் நிலையிலேயே நண்பர் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருப்பதை கண்டுள்ளார்.

இந்த நிலையில் வாக்குவாதம் மோதலாக வெடித்தது. அதில் ஒருவர் தமது துப்பாக்கியால் சுட்டதில் Gunn தலையில் அந்த குண்டு பாய்ந்துள்ளது.

இதில் குற்றுயிராக மீட்க்கப்பட்ட அவர், அதே நாள் நள்ளிரவில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். கொலைகாரன் யார் என நண்பருக்கும் தெரியாத நிலையில், இந்த வழக்கு 2 ஆண்டுகள் கடந்தும் முடிவுக்கு வராமல் உள்ளது.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்